சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தமது புதல்வர் அபு பெக்கிர் மாஹ்முட்டின் விவாகரத்து வழக்கில் சாட்சியாக அழைக்கப்படுவார்.
ஏனெனில் அப்துல் தாயிப், தமது புதல்வருடனும் அப்போதைய மனைவியான ஷானாஸ் ஏ மஜிட்டுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கோலாலம்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. அந்த இருவருக்கும் இடையிலான தகராறுகளுக்கு அவர் ஒரு சாட்சியும் ஆவார்.
“ஒரே வீட்டில் வசித்ததால் பெக்கிர் , ஷானாஸை தாக்கினாரா இல்லையா என்பதை தாயிப் நிரூபிக்க முடியும்,” என ஷானாஸின் வழக்குரைஞர் ராபியி ஷாபியி கூறினார்.