பிசிஏ தொடர்பில் மாமன்னருக்கு மகஜர் கொடுத்தார் கர்பால்

1 karpalகுற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தத்துக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் என மாமன்னரைக் கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை டிஏபி தலைவர் கர்பால் சிங் இஸ்தானா நெகாராவிடம் ஒப்படைத்துள்ளார்.

அகோங்கின் ஒப்புதல் இல்லாவிட்டாலும்கூட அத்திருத்தங்கள் 30 நாள்களில் இயல்பாகவே சட்டமாகிவிடும் என்பதை உணர்ந்தே கர்பால் அம்மகஜரைக் கொடுத்துள்ளார்.

“அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என மாமன்னரைக் கேட்டுக்கொள்கிறேன்.

“….அவ்வாறு செய்வது சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் கொடூரமான சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளமாக அமையும்”, என்றாரவர்.

அகோங்கின் மூத்த தனிச் செயலாளார் கர்பாலிடமிருந்து மகஜரைப் பெற்றுக்கொண்டார்.