என்எப்சி-இன் கடன்களை ஏற்க ஜப்பானிய நிறுவனம் தயாராக இல்லை

1 nfcநேசனல் ஃபீட்லோட் மைய(என்எப்சி)த் திட்டத்துக்கும் நேசனல் பீட்லோட் நிறுவனத்தின் கடன்களுக்கும் பொறுப்பேற்பதன் தொடர்பில் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்ற பேச்சுகள் கைவிடப்பட்டன.

சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் ஓர் உடன்பாடு காண முடியாமல் பேச்சுகள் முறிந்துபோனதாக நிதி அமைச்சர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றத்தில் டோனி புவாவுக்கு (டிஏபி எம்பி- பெட்டாலிங் ஜெயா உத்தாரா)  எழுத்து வடிவில் அளித்த பதிலில் குறிப்பிட்டார்.

“கிரிமிடோனாஸ் ஆக்ரோ சென். பெர்ஹாட், நேசனல் ஃபீட்லோட் நிறுவனத்தின் சொத்துகளையும் பொறுப்புகளையும் ஏற்க முதலில் முன்வந்தது.

“ஆனால், இரு தரப்புகளாலும் ஓர் உடன்பாட்டுக்கு வர இயவில்லை. அதனால், பேச்சுகள் கைவிடப்பட்டன”, என்றாரவர்.

நேசனல் பீட்லோட் நிறுவனம், முன்னாள் அமைச்சரும் அம்னோ மகளிர் பகுதித் தலைவராக திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமான ஒரு நிறுவனமாகும்.