நோ ஒமார்: ஐஎஸ்ஏதான் மலேசியாவை அமைதியாக வைத்திருந்தது

1 noh1987-இல் ஒப்ஸ் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்தால் மலேசியா அமைதி நிலவும் நாடாக இருந்திருக்காது என பிஎன்னின் தஞ்சோங் காராங் எம்பி, நோ ஒமார் இன்று கூறினார்.

அந்த ஒப்ஸ் லாலாங் நடவடிக்கையில் 106பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குமுன் 1987-இல் இனக் கலவரம் வெடிக்கும் அபாயம் இருந்தது என்றாரவர்.

“ஏனென்றால், மலாய்க்காரர்-அல்லாதார் மலாய்க்காரர்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்”. முன்னாள் அமைச்சரான நோ, இன்று மக்களவையில் பாதுகாப்புக் குற்றங்கள் (சோஸ்மா) சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அந்நடவடிக்கையில் அம்னோ அரசியல்வாதிகளும்கூட கைது செய்யப்பட்டனர் என்றாரவர்.

“அதனால்தான், இப்போது ஐஎஸ்ஏ இல்லை என்பதால், சோஸ்மா நமக்குத் தேவைப்படுகிறது”, என்று நோ குறிப்பிட்டார்.