செப்டம்பர் மாதம் கோலாலும்பூரில் 101ஆண்டு பழைமையான ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றதைத் தொடர்ந்து வருங்காலத்தில் கோயில் உடைப்புகளைத் தடுப்பதற்காக இந்து பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்படும் என தெலுக் இந்தான் முன்னாள் எம்பி, எம். மனோகரன் கூறினார்.
அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் உதவியாக இருப்பார்கள் என்றாரவர்.
“அது இந்து சமய இளைஞர்களிடையே கட்டொழுங்கை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
“அது முழுக்க முழுக்க ஒரு பாதுகாப்பு இயக்கம்தான்”, என மலேசியாகினியிடம் மனோகரன் தெரிவித்தார்.
நேற்று அதே ஆலயத்தில் 20 பேர் அதில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
நல்ல திட்டம்தான் பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களை இந்திய குண்டர்கள் என்று அவர்களே அந்த எண்ணையும் குறிப்பிடாமல் இருந்தால் சரி. பார்த்து செய்யுங்கள். நம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் காத்து கிடக்கின்றனர்.
நாட்டில் பொது கோயில், தெருக்கோயில், வீட்டுக் கோயில்,காட்டுக் கோயில் என சுமார் இருபதாயிரம் கேயில்கள் உள்ளன. இவற்றில் பல சொந்த வருமானத்திற்காகவும் கிடா வெட்டி தின்பதற்காகவும் மது அருந்தி ஆட்டம் போடுவதற்காகவும் தனி நபர்களால் நடத்தப்படும் சென்டிரியான் பெர்காட் கோயில்களாகும். இவ்வளவு கோயில்கள் இருந்தும் நம்மினத்தில் பக்தியும் ஒழுக்கமும் கொஞ்சமும் அதிகரிக்கவில்லை. மாறாக தினமும் ஒருவன் வெட்டுப்பட்டு சாகிறான். இந்தக் கோயில்களை வரிந்து கட்டிக் காப்பாற்றி நமது மனோகரன் என்ன சாதிக்கப் போகிறார். ஐயா மனோகரன் அவர்களே, தீபாவளி நெருங்கி விட்டது. நமது இனத்துக்காரன் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி டசன் கணக்கில் பீர் போத்தலை வாங்கி வீட்டோரம், ரோட்டோரம் விடிய விடிய குடித்து கும்மாளம் போடப்போகிறான். பட்டாசுகளை வாங்கி இரவு முழுவதும் வெடித்து பணத்தை கரியாக்கி அடுத்தவனையும் உறங்க விடாமல் செய்யப்போகிறான். இந்த மாதிரி ஆசாமிகளை திருத்துவதற்கு ஏதவாது குழுவை அமையுங்கள்.உங்களுக்கு புண்ணியம் கிட்டும்.
நல்ல திட்டம் முயற்சி seiyunggal……
நம் இந்தியர்கள் திருந்தாத ஜன்மங்கள்….!!!! ஊருக்கொரு சாமி!!!காட்டுமிராண்டி தனமாக வழிபாடு..!!! மற்ற இனத்தவர்கள் நம்மை அவமதித்தாலும் சூடு சோரனை இல்லாத மாங்காய் மடையர்கள்.
ஐயா மனோகரன் அவர்களே….வெளிப்படையான ஒரு உண்மை என்னவெனில், எந்த கோயிலாக இருகடும்…பதிவு பெற்றதோ, பதிவு பெறாததோ…அது உடை படும்போது ரோஷமுள்ள இந்தியனுக்கும் இனத்துக்கும் , ஹிந்துக்கும் ஆத்திரம் வரும். ஆனால்…உடைபடுவதுற்கு பல காரணங்கள் உண்டு ..அதில் ஒன்று பதிவே இல்லாமல் , தனியார் நிலத்திலோ , அரசாங்க நிலத்திலோ சொந்த கோயிலை கட்டிகொள்வது. அவன் கோயிலுக்கு போககூடாது என்பதற்காக இவனும் ஒரு கோயில் கட்டிகொள்கிறான். அனுமதி கிடையாது, அதை பெறுவதற்கும் புத்தியும் கிடையாது, நேரமும் கிடையாது…மாற்றான் வந்து மீண்டும் சொந்தம் கொண்டாடும்பொழு , உடைக்க வரும்போது கூச்சல் போடுவது சரியா? மீண்டும் சொல்கிறேன்…எந்த கோயில் உடைபட்டாலும் மனம் வலிக்கிறது…அனால் நமது இனத்திலும் சில கேணயர்கள் கடவுளே இஷ்டப்படாத இடத்திலெல்லாம் தனது இஷ்டப்படி கட்டி கும்மாளமிடுவது நமது மதத்திற்கே செய்யும் அவலச்செயல் அல்லவா?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…எந்த கோயில் உடைபட்டாலும் மனம் வலிக்கிறது….சரி உங்கள் விருப்பப்படி இனி எந்த கோயிலும் உடைக்க விடமாட்டோம் என்பதை கேட்க நன்றாக இருந்தாலும், இருக்கின்ற அத்தனை கோயில்களையும் (வீட்டுக்கு முன்னாடி இருப்பதை சேர்த்து, சந்து போந்து, மூலை முடுக்குலே இருக்கிறதை சேர்த்து ) பதிவு பெற்ற கோயில்களாக மாற்றி , இந்த போராட்டத்தை தொடங்கலாமே, நானும் அந்த போராட்டத்தில் இறங்க ரெடி …நீங்க ரெடியா? உடைக்காமல் இருக்க என்ன என்னென்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து செயல்பட்டால் ந்த போராட்டத்திற்கு போதிய வெற்றிகிட்டும்..இல்லையேல்..இதுவும் ஒரு ’emotional shouthing ‘ மாதிரி ஆகிடும் .
இதயெல்லாம் செய்றதுக்கு முன்னாடி பூச்சோங் பக்கம் வாங்க….வந்து பாருங்க…ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் ஒரு கோயில் வச்சிருக்கான் நம்ப ஆளு! ஒவ்வொரு வீட்டிலேயும் ஒரு கோயில் தலைவர்…ஒரு கோயில் பூசாரி இருக்காரு !ஒவ்வொரு வீட்டிலேயும் ஒரு திருவிழா…வருஷத்துக்கு ஒரு ஆடு பலிகடா..!!!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…எந்த கோயில் உடைபட்டாலும் மனம் வலிக்கிறது…ஆனா அந்த கோயில் சாக்கடை சந்துலே இருக்கறதை பார்த்ததும் மனசு இன்னும் வலிக்குது!
இருந்தாலும் உங்க போராட்டத்திற்கு வாழ்துகள்.
தீயா சிந்திக்கணும் மனோகரா..!!
மனோகரா! அரசியல் தெரியுமா? தெரியாதா? 2007ல் பாடாங் ஜாவாவில் கோவில் உடைத்ததால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட கொந்தளிப்பில் 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தெலுக் இந்தானில் ஜெயித்தீர். அதற்கப்புறம் கோவில் உடைப்பு குறைந்ததால், இந்தியர்களின் ரத்தத்தில் சூடு ஏறாததால் சென்ற பொதுத்தேர்தலில் உம்மை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். கோவில் உடைப்பு நடந்தால்தான் அரசியல் வாதிகளுக்கு பிழைப்பு. அந்த அளவிற்கு அறிவாளிகள் நாம். ஏதாவது பள்ளியில் நம் பிள்ளைகளை எவனாவது ‘கில்லிங்’ என்றும் கூறும்வரை, அல்லது சாலை ஓரத்தில் ஏதாவது சிறிய கோவில் ஒன்று உடைப்ப்படும்வரை இந்திய அரசியல்வாதிகளுக்கு வேறு வேலை கிடையாது. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன்.உங்கள் கட்சியின் இந்திய வேட்பாளர்கள் அனைவரும் சீன வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதியில் குளிர் காய்கிறார்கள். நீங்கள் மட்டும் அஸ்லி,மலாய்க்காரர்கள் அதிகமுள்ள தொகுதிக்கு ஓடியதின் காரணமென்ன?
அப்போ இந்து சங்கம் /கோவில் சங்கம்/இந்து தர்ம மாமன்றம்/அந்த மன்றம் இந்த மன்றம்/அந்தப்படை /இந்தப்படை /சொந்தப்படை/சோகப்படை/எல்லா அணிகளும் இனி இந்து பாதுகாப்பு படையிடம் மெம்பெர் ஆகலாம்.இவர்கள் கோவில் உடைப்புக்கும் (உடைந்த பின்) மட்டும் செக்குரிட்டி தருவார்கள். அவன் உடைதுக்கொன்டே இருப்பான் என்ற நம்பிக்கையுடன்… நல்ல முடிவுடன் நல்ல பாதுகாப்பு.வாழ்க இந்து கோவில் உடைப்பு நிவாரண பாதுகாப்பு படை.
நம் பிள்ளைகளின் கல்வி நிதிக்கு ஒரு வெள்ளி கொடுக்கத் தயங்குகிறோம். Dozen கணக்கில் பட்டாசு வாங்கி சீன தேசத்து பட்டாசு உற்பத்தியாளர்களை பணக்காரர் ஆக்குகிறோம். அதைவிட அதிகாக பானவகைகளுக்கு செலவு செய்கிறோம். என்ன தீபாவளி…என்ன கொண்டாட்டம்??? அட போங்கப்பா
yb மனோகரனுக்கு என்ன ஆகி விட்டது ? முதலில் எல்லா இந்து கோவில்களும் முறையான பதிவு பெற்றுள்ளதா ?,கோவில் இருக்கும் நிலத்தை கையடக பெற்றுள்ளதா ? என்று தகவலை திரட்டி அதுக்கு முடிவு கட்டுங்கள் ,கோவில்கள் உடைபடுவதுக்கு முக்கிய காரணம் இதுதானே, ஹிந்து சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ?
தட்டி எழுப்பி பக்கத்தில் வைத்துக்கொளுங்கள் ,சும்மா மண்டை போல் ஆள் சேர்க்க கூடாது yb !
முறையான வழிப்பாடு,,முறையான நிர்வாகம் இருந்தாலே கோவில் அப்படியே இருக்கும் .சேர்க்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேருவதர்க்கான வழிகளை ..காட்டுங்கள் ..கோவில்கள் உடைப்படும் போது சங்கத்தின் தலைவர்கள் என்ன முடிவெட்டிக்கொண்டு இருப்பார்களா?
ஒரு வகையில் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற சீக்கிய மதம் எவ்வளவு முறையான, போற்றத்தகு வழிபாட்டு முறையையும், தளங்களையும் கொண்டுள்ளது. மற்ற இனத்தவர் கேலி செய்யும் அளவுக்கு, அவர்களின் வழிபாடு உள்ளதா? நமது வழிபாட்டில் உள்ள தகாத முறைகளை (எகா: கோவிலில் உயிர் பலி etc etc etc) நாம் கலையா விட்டால்…… நமது மதத்தின்பால் நாமே அவமானங்களை குவிப்பது ஆகும். காட்டுமிராண்டித்தனத்தை மத வழிபாடு என அறியாமையால் அடங்க்காட்டுவது நம்து மதத்திற்கு நாமே சேர்க்கும் அவமானமாகும்.
கோவில் உடைப்பு – முறையான இடத்தில, முறையாக கட்டப்பட்ட கோவில்களுக்கு பட்டா வாங்குவதில் சம்பந்தப்பட்டோர் முயற்சிக்க வேண்டும். வசூலில் மட்டும் கவனம் கூடாது. ஒரே தேசத்திலிருந்து வந்த சகோதர சீக்கியர் நமக்கு நல்ல உதாரணம். கண்ட2 இடங்களில், சிறு2 கோவில்கள் தோன்றுவதை ஆதரிப்பது நல்லதன்று. முறையான கோவில் பராமரிப்பு மிக முக்கியம். கோவில்கள் சமூக சேவைக்கும் பங்களிக்க வேண்டும்.
“தமிழ்ப் பள்ளிகள் பாதுகாப்புப் படை” என்று உருவாக்கியிருந்தால் , எதிர்காலத்தில் நம்மினம் தன் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொண்டு தலை நிமிர்ந்து வாழ வழிவகுத்திருக்கும் என்று நினைக்கின்றேன்!
நல்ல முயற்சி எனக்கு தெரிந்து சில ஆலய நிர்வாகம் பொது தொண்டு ,
வசதி குறைந்த பள்ளி பிள்ளைகளுக்கு உதவி ,நன்றாக படிக்கும் வசதி
குறைந்த சில மாணவர்களை தத்து எடுத்து இருக்கிறார்கள்.
கடவுள் மந்திரத்திற்கு கட்டு பட்டவர் ,மந்திரம் பிராமணர்களுக்கு
கட்டு பட்டது என்று கூறி கோயில்களுக்கு பிராமண குருக்கள்
சிலைகளுக்கு குட முழக்க விழாவில் கும்பாவிசேகம் செய்து சிலைக்கு உயிர் கொடுத்து சிலைக்கு சக்தியையும் கொடுப்பதாக
கேள்விப்பட்டுள்ளோம் , அப்படி இருக்க சாமிக்கே பாது காப்பு படையா , என்ன மனோகரன் ,கோயிலை உடைக்கும் கயவர்களை எங்கள் கடவுள் நின்று கொள்ளும் உமக்கு தெரியாதா ,எல்லாம் அவன் செயல் ,ஆவதும் அவனாலே அழிவதும் அவனாலே , கோயிலை உருவாக்கிரவனும் அவனே ,உடப்பவனும் அவனே ,அதை வைத்து தேர்தல் தேர்தல் பிரசாரம் செய்பவன் இவனே நைனா
இந்த சமுதாயத்தை வாழவைப்பது இரண்டு. 1. பள்ளிகுடம், மாணவர் பருவத்தை செம்மை படுத்துவது. 2. கோயில், அடுத்த பருவத்தை செம்மை படுத்துவது. இவை இரண்டும் சரியாக செய்தல் இந்த சமுதாயம் சரியாக வாழும். மற்ற சமுதாயத்தை பாருங்கள் புரியும்.
மனுஷன எதையாவது செய்ய விடுங்கப்பா! நீங்களும் எதையும் உருப்படியா செய்ய மாட்டிங்க மத்தவங்களையும் செய்ய விடமாட்டிங்க! குறை சொல்ல மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வரிங்க! நம்ம எல்லா சொத்துக்களையும் மலாய்க்கார அரசாங்கம் ஏப்பம் விட்டுட்டானுங்க! பத்தாதிற்கு ம இ கா காருனுங்க மிச்சம் மிதியை சொரண்டி முடிச்சிட்டானுங்க! இப்படியாவது கொஞ்சம் நிலங்கள் மிஞ்சும்ன்னு பார்த்த, அதுக்கும் ஆப்பு வச்சிருவிங்க போலருக்கு.இதெல்லாம் நாளைக்கு நம்ம பிள்ளைங்களுக்கு உதவும்.நல்ல சிந்திச்சு பாருங்க புரியும்!