நஜிப் வழக்கம் போல நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் விளையாட்டை ஆடுகிறார்

“சிறுபான்மை இனம் உட்பட அனைவருக்கும் நியாயம், திறந்த போக்கு என எல்லா இடங்களிலும் சொல்கின்றீர்கள். ஆனால் உத்துசான், எஸாம், பெர்க்காசா ஆகியவற்றை அங்கீகரிக்கின்றீர்கள்.”

எம்சிஎம்சி, அஜிஸ் பேரியையும் மலேசியாகினியையும் விசாரிக்கிறது

ரூபன்: “ஒரே மலேசியா-மக்களுக்கு முதன்மை அடைவு நிலை இப்போது என்னும் சுலோகம் எல்லாம் வெறும் உதட்டளவுக்கு மட்டுமே என்பதை இது காட்டுகிறது.

இங்கு, அரசியலமைப்பு வழக்குரைஞர் என்ற முறையில் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி தமது நிபுணத்துவக் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்- ஆனால் அது அரசாங்க எண்ணங்களுக்கு முரணாக இருக்கிறது. அதனால் இப்போது அவர் விசாரிக்கப்படுகிறார். நமது பண்புகள் எல்லாம் கேலிக்கூத்தாகி விட்டன.

ஒரே ஒரு வழிதான் உள்ளது. பேராசிரியர் அவர்களே தொடர்ந்து பேசுங்கள். பெர்சே 2.0 பேரணியில் 50,000 மக்கள் கலந்து கொண்டதைப் போல. அரசாங்கம் என்ன செய்ய முடியும்? தேர்தலிலும் நமது வெறுப்பைக் காட்டுங்கள்.

ஹென்ரி ஹாக்: நான் பல ஆண்டுகள் அரசியலமைப்புச் சட்டம் பற்றி விரிவுரை நிகழ்த்தியிருக்கிறேன். அப்துல் அஜிஸ் சொன்ன கருத்துக்கள் மிக எளிதானவை. முதலாம் ஆண்டு சட்ட பட்டப்படிப்பு மாணவர்கள் கூட அதனை புரிந்து கொள்ள முடியும்.

உத்துசான் மலேசியாவும் மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையமும் அதனைப் புரிந்து கொள்ள முடியாதது வெட்கக் கேடான விஷயம் ஆகும்.

அப்துல் அஜிஸுக்கு எதிராக எந்த ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தால் அவர், சட்டப் பட்டப்படிப்பு மாணவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வது நல்லது.

ஜனநாயகம் 53: நாம் என்ன ரகசிய போலீஸ் கால கட்டத்திலா இருக்கிறோம். பேராசிரியர் ஒருவர் தாம் நிபுணத்துவம் பெற்ற துறையில் கருத்துச் சொல்லக் கூடாதா?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? சிறுபான்மை இனம் உட்பட அனைவருக்கும் நியாயம், திறந்த போக்கு என எல்லா இடங்களிலும் சொல்கின்றீர்கள். ஆனால் உத்துசான், எஸாம், பெர்க்காசா ஆகியவற்றை அங்கீகரிக்கின்றீர்கள். அந்த அங்கீகாரம் உண்மையில் உங்கள் முயற்சிகளைக் கீழறுப்புச் செய்கின்றது.

அது என்ன வழக்கம் போல வழக்கம் போல நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் வியூகமா?

கேகன்: உத்துசான் அம்னோவின் உண்மையான முகம். உண்மையான குரல். தான் விரும்பாத கருத்துக்களை எதிர்க்க அம்னோ உத்துசானைப் பயன்படுத்துகிறது. அந்த ஏடு வெளியிடும் இனவாத கட்டுரைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

முனைவர்: யார் பேசுவது பார்த்தீர்களா?

பிடிஎன்: ஒன்று மட்டும் நிச்சயம்- பேராசிரியர் அப்துல் அஜிஸ் மலாய்க்காரர்- ஆனால் அவர் மற்றவர்களைப் போல எளிதில் மறக்கக் கூடிய மலாய்க்காரர் அல்ல.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது- டாக்டர் மகாதீர் முகமட் அதிகாரத்தில் இருந்த போது சுல்தானுடைய அதிகாரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அரசர் அமைப்பு முறை ரத்துச் செய்யப்படக் கூடும் என்ற எண்ணம் கூட எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மக்களுடைய எண்ணமும் அதுதான்.

மகாதீருக்கு சவால் விடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை. இறுதியில் ஒரு மனிதரும் கட்சியும் வலுவடைந்தன. அதனால் எல்ல அமைப்புக்களும் அவருக்கும் அவரது கட்சிக்கும் அடி பணிந்தன. அந்தத் தவறு நாட்டு நன்மைக்காக திருத்தப்பட வேண்டும்.

நம்பிக்கை: அஜிஸ், உங்களை மகாதீருக்கு இணையாக எண்ண வேண்டாம். அவர் அரச குடும்பத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினார். தவறாக நடக்க அவர் ஆட்சியாளர்களை அனுமதிக்கவில்லை.

அவர்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் மகாதீர் அமைத்தார். மகாதீர் ஆட்சியாளர்களை அவமதிக்கவில்லை. நாட்டுக்கான தமது கடமையைத்தான் அவர் செய்தார்.

அதே வேளையில் பிரபலம் அடைவதற்காக நீங்கள் அதனைச் செய்தீர்கள். அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உங்களுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் புகழ்ச்சியினால் நீங்கள் மனம் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்கும் விலை உண்டு.

பையுவன்ஷெங்: மகாதீரை  நான் ஒரு விஷயத்தில் பாராட்டுகிறேன் – சுல்தான்களுடைய அதிகாரங்களைக் குறைத்ததுதான் அந்த விஷயம். ஒரு காலத்தில் சுல்தான்களும் அவர்களுடைய குடும்பங்களும் தங்களது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி வந்தனர். சட்டங்களும் அவர்களைத் தொட முடியாமல் இருந்தன.

ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: 1983ம் ஆண்டிலும் 1993ம் ஆண்டிலும் மகாதீர், தமது சொந்த அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்களை பயன்படுத்தினார், தவறாகப் பயன்படுத்தினார்.

அம்னோ ஆட்சியாளர்கள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தால் தமது நடவடிக்கைகளுக்காக மலாய் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய முதலாவது நபராக மகாதீர் இருக்க வேண்டும்.

குழப்பமடைந்தவன்: கல்வியாளர் என்னும் முறையில் நான் டாக்டர் அஜிஸின் நிலையை பாராட்டுகிறேன். அவரைப் போன்ற எந்த அபத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாத கல்வியாளர்கள் நமக்கு நிறையத் தேவை.