அரசுதொடர்பு நிறுவனத் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் தேவையா? டிவிட்டரில் கைரியும் ஒங்கும் விவாதம்

khairiடிஏபி எம்பி ஒங் கியான் மிங்,  தேவைக்கு அதிகமாகவே  அரசுத்தொடர்பு நிறுவனங்களை  அமைப்பதும் அவற்றின் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் கொடுக்கப்படுவதும்  அவசியம்தானா என்று நேற்று  கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்த இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்(இடம்), உயர்திறன் படைத்தவர்களை அரசுத்துறைகளுக்குக் கவர்ந்திழுக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார்.

“சிறந்தது வேண்டுமென்றால், கொடுக்கத்தானே வேண்டும்”, என்றார்.

இதற்கு  ஒங்கின் மறுமொழி: சம்பளத்துக்கு ஏற்ப அவர்களின் பணித்தரமும் இருக்க வேண்டும்.

“ஷபாongஸ் தலைவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தரம் வெளிப்படவில்லையே. அதை அரசாங்கம்தானே மீட்டெடுக்க வேண்டியுள்ளது”.

அதற்கு கைரி, அவர்கள் திறமையாக செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், ஒங் (இடம்) அவர்களின் சம்பளம் குறித்து கேள்வி எழுப்புவது சரியல்ல என்றார்.

என்றார்.