டிஏபி: DEIA அறிக்கைக்கு ஒப்புதல் இல்லாமலேயே ஜோகூர் அணைக்கட்டு வேலைகளைத் தொடங்கியது ஏன்?

ஜோகூரில், கஹாங் அணைக்கட்டு மீதான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (DEIA) அறிக்கைக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே கட்டுமான வேலைகள் தொடங்கப்படுவது குறித்து மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் கவலை தெரிவித்தார்.

அந்த அறிக்கை  ஆகஸ்ட் 25-இல் குளுவாங், ஜோகூர் பாரு, புத்ரா ஜெயா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது என்றும் அதைச் சீர்தூக்கி ஆராயும் பணி நவம்பர் 17-இல்தான் முடிவுறும் என்றும் டான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

எனவே,“மந்திரி புசார்  அணைக்கட்டு வேலைகள் இம்மாதம் தொடங்கும் என்று கூறியது உண்மையாக இருக்காது. அப்படி நடந்தால் அது சட்டமீறலாகும்”, என்றார்.

அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் முன்னரே, அரசாங்கம் கட்டுமான வேலைகளைத் தொடங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பிய டான்,  அணைக்கட்டுக்காக அப்பகுதியைத் துப்புரவுபடுத்தும்போது வெட்டுமரங்கள் கிடைக்குமே அதற்காகத்தான் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறதா என்றும் வினவினார்.