பாஸ்: கர்பாலை டிஏபி கண்டிக்க வேண்டும்

1pasஇனத்தையும் சமயத்தையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் பதிவை இரத்து செய்ய வேண்டும் அல்லது அவற்றில் எல்லாரும் உறுப்பியம் பெற அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது பாஸ் கட்சிக்குப் பிடிக்கவில்லை.

கர்பாலின் பேச்சு பக்காத்தான் ரக்யாட் உணர்வுக்கு முரணானது என்று கூறி அதற்காக அவரை டிஏபி கண்டிக்க வேண்டும் என பாஸ் விளம்பரப் பிரிவு தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அறிக்கை விடுத்துள்ளார்.

பாஸ் அவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சொன்னார்.

பாஸ் 23 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் கிளந்தானிலும் 1999-இல், திரெங்கானுவிலும் 2008-இல், கெடாவிலும் இன, சமய நல்லிணக்கத்தை நிலைநிறுத்தி வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அங்கெல்லாம் முஸ்லிம்-அல்லாதார் ஒதுக்கப்பட்டதில்லை என்றாரவர்.