போலீஸ் படையின் சிறப்புப் பிரிவில் (எஸ்பி), அவசரகாலத்தில் இருந்ததைவிட நஜிப் ஆட்சியில் அதிகமான ஆள்கள் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இதைச் சுட்டிக்காட்டிய ஸ்டீபன் சிம் (டிஏபி- புக்கிட் மெர்தாஜாம்), 1954-இல் எஸ்பி பிரிவில் 459 பேர் பணியாற்றினர் என்றார்.
2012-இல் 8,200 பேர் அதில் இருந்தனர் அதாவது அப்துல்லா அஹமட் படாவி காலத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட 3,000 பேர் அதிகமாகவே இருந்தனர்.
“அவசரகாலத்தின்போது உளவுப்பணிகளையும் அவசரகாலம் தொடர்பான பணிகளைச் செய்யவும் உருவாக்கப்பட்டதுதான் எஸ்பி. (நஜிப்பின்கீழ்) மலேசியாவின் நிலை அவசரகாலத்தில் இருந்ததைவிட மோசமாக உள்ளதா, என்ன?” என்று சிம் வினவினார்.