எம்ஏசிசி-க்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கொடுத்தால் அதிகார அத்துமீறல் நிகழ்ந்து விடலாம்

1-razaliஅரசாங்கம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தைக் கொடுக்காது. அது “அதிகார அத்துமீறல்”களுக்கு இடமளித்து விடலாம்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தால் எம்ஏசிசி-யே விசாரணையாளராகவும் வழக்குத் தொடுப்பாளராகவும் ஆகிவிடும் என்பதால் குறுக்கிடு கட்டுப்பாடுகள் ( checks and balances) இல்லாது போய்விடும் என்றார்.

“அதனால் அதிகார அத்துமீறல் ஏற்பட்டு குற்றம் செய்யாதவர்கள்கூட குற்றம் சாட்டப்படும் நிலை உருவாகலாம்”, என்றவர் கூறினார்.