எம்ஏசிசி: என்எப்சி குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள்

1 nfcவிவசாய அமைச்சு, நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டத்துக்கான குத்தகையைத் தொழில்நுட்பமோ, நிதிவசதியோ இல்லாத ஒரு நிறுவனத்துக்கு வழங்கியது என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியுள்ளது.

அந்தக் குத்தகை வழங்கப்பட்டதில் பல கோளாறுகள் காணப்படுவதாக அவ்வாணையம் அதன் 2012 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கக் கடன்கள் வழங்குவதால் ஆதாய முரண் (conflict of interest) என்ற நிலை உருவாகலாம் என்பது பற்றி யோசிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அத்திட்டத்தை வழங்குவதற்குமுன்  “கவனிக்கப்பட  வேண்டியவை கவனிக்கப்படவில்லை”.

விவசாய அமைச்சு என்எப்சி திட்டத்தை மேற்கொள்ள தகுதியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டது.

குத்தகையை வழங்கும் முடிவு பற்றியும் கடன்களுக்கான நிபந்தனைகள் பற்றியும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை, அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவும் இல்லை.

இப்படி அந்தக் குத்தகை வழங்கப்பட்டதில் 12 கோளாறுகளை எம்ஏசிசி பட்டியலிட்டுள்ளது.

எம்ஏசிசி-இன் இந்த அறிக்கை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வழங்கப்படும்.