சுங்கை லிவாவ் இடைத் தேர்தலில் பாஸின் வெற்றிக்கு “ஆவி வாக்காளர்கள்” உதவினார்கள் என்று பிஎன் கூறிக்கொண்டிருப்பதில் உண்மை இல்லை என்று கெடா பாஸ் ஆணையர் மாபுஸ் ஒமார் இன்று கூறினார்.
“கண்ணில் படாத வாக்காளர்கள்” என்று பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறும் அந்த வாக்காளர்கள் இதற்குமுன் பல தேர்தல்களில் பாஸுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றாரவர்.
“வேண்டுமானால் தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்”, என்றவர் சொன்னார்.
ஷஹிடானைப் போலவே , கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரும் புக்கிட் புசார் வட்டாரத்தில் சில வாக்காளர்கள் குறித்து சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆக ஷாஹிடான் காசிம், நாட்டின் தேர்தல் முறையில் உள்ள ஏராளமான குழப்பங்களையும் குளறுபடிகளையும் தவிர்க்க நீங்களும் Bersih உடன் சேர்ந்து போராடவேண்டும். சும்மா செம்மறி ஆடு போல இப்படிப் பிளரிக்கொண்டு இருந்தால் பயன் இல்லை.
ஆவிதானே, ஆவியை அறியும். அதனால்தான் ஆவியைக் கண்டு மிரண்டு பிதற்றுகின்றார் சாஹிடான்.
சுங்கை லிமாவு இடைத் தேர்தலில் லொறி கணக்கில் சீனி kg ஒரு வெள்ளிக்கு விநியோகித்தும் தில்லுமுள்ளு செயிதும் வெற்றி பெற முடியவில்லையே!தோல்விக்கு காரணத்தை அறிய தேடுகிறார்கள்!ஆவி,ஆசாமி ஏதும் கிடையாது மலாயிக்கார சுனாமி பாரிசானை புரட்டி போட்டுடுச்சி! மகாதிர் வாரிசுக்கு சுங்கை லிமாவில் ஆப்பு,அம்னோ கட்சி தேர்தலில் உதவி தலைவர் பதவிக்கும் ஆப்பு,நஜிப்புக்கு நிம்மதி மகிழ்ச்சி!