நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) விரைவுப் பேருந்துகளுக்கும் பள்ளிப் பேருந்துகளுக்குமான கட்டணங்களை இன்னமும் ஆராய்ந்து வருகிறது. புதுக் கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
புதிய கட்டணங்களை இறுதிசெய்ய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதாக ஸ்பாட் தலைவர் சைட் அமிட் அல்பார் கூறினார்.
“செய்யும் முடிவு எல்லாருக்கும் திருப்தி அளிக்க வேண்டும் என்பதால் இவ்விவகாரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறோம்”, என்றாரவர்.