நேற்று, கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) ஸ்ரீமுனீஸ்வீரர் காளியம்மன் ஆலயப் பகுதியில் மேற்கொண்டஉடைப்புப் பணியில் ஆலயம் உடைபடவில்லை என மஇகா தலைவர் ஜி.பழனிவேல் வலியுறுத்தியுள்ளார்.
“ஆலயத்தை ஒட்டியிருந்த கடைகள்தான் உடைக்கப்பட்டன. ஆலயம் அப்படியேதான் இருக்கிறது”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் பழனிவேல் தெரிவித்தார்.
ஆலயம் அதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியைத் தாண்டியும் விரிவாக்கப் பணிகளைச் செய்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். அப்படி விரிவுபடுத்தப்பட்ட பகுதிகள்தான் உடைக்கப்பட்டன என்றாரவர்.
ஆனால், கோயில் நிர்வாகிகள், டிபிகேஎல் உடைக்கப்பட வேண்டிய பகுதிகளையும் தாண்டி ஆலயத்தின் கட்டுமானத்திலும் கைவைத்திருப்பதாக கூறுகின்றனர்.
நீ எல்லாம் உருப்பட மாட்ட…!!!
பழனி பொய் சொல்லமாட்டார். ஐயப்பப் பக்தர் பொய் சொல்வாரோ!
பழனி மலை ஆண்டவனுக்கே வெளிச்சம்! அய்யா டத்தோஸ்ரீ பழனி….இது உமக்கே சரியா படுதா…? இப்படியே…பூஜை அறையிலிருந்தே பட்டும் படாமலும் அறிக்கை விட்டா எப்படி பழனி? கேமரன் மலையிலே அணைகட்டை தாண்டி வந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிகட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் பாடுபட்ட மாதிரி நீர் செயல்படவில்லை…அறிக்கை மேல் அறிக்கைதான் மிச்சம்! அதே போல்தான் நீர் பதவி ஏறி அத்தனை கோயில்கள் உடை பட்டன…எத்தனை தோட்ட மக்கள் அடிபட்டனர், அவலப்பட்டனர்! ஆனால் நீர் பூஜை அறையிளிருந்துகொண்டே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறீர் பழனி…இது தலைவன் லட்சணமே கிடையாது, புறிஞ்சுக்கோ பழனி! காலத்தில் இறங்கு…உனது காரிய சித்தியைக்காட்டு பழனி! காரியத்தில் இறங்காமல் சூடத்தையே சித்திகிட்டு இருந்தா கடவுள்கூட கடுப்பாயிருவாறு பழனி!
இந்த கோயில் பிரச்சனை பெரிய பிரச்சனை என்று உமக்கு சொல்லித்தான் புரியவைக்கவேண்டுமா? இந்து சங்கத்தை கூபிட்டு இனி இந்த மாதிரி நடக்காமல் கோயில் உடைப்பு அரனை உடனே செயல் படுத்த உமக்கு வக்கில்லையா…அல்லது ஒபாமா சொன்னால்தான் செய்வீரா? பல கோயில்கள் பதிவு இல்லாமல் இருப்பது உமக்கு தெரியும்தானே…பிறகென்ன ? என்ன செய்ய வேண்டும் என்று தேங்கா மண்டையில் கொட்டினால்தான் புரியுமா ? சொல்வது உங்களுக்கெல்லாம் சுலபம்டா-ன்னு வாயிலே முனு முனு முணுப்பது கேட்கிறது பழனி. இந்த மாதிரி சிக்கலை தீர்கத்தானே உம்மை தலைவனாக வச்சிருக்கோம்! பிறகென்ன முனு முனுப்பு வேண்டியிருக்கு பழனி? அப்புறம் எதுக்குதான் தலைவனா வந்தீர் பழனி? போதும் பழனி…ரொம்ப நேரமா நானும் சொல்லிகிட்து இருக்கேன்…நீர் பாட்டுக்கு, மணியடிச்சுகிட்டு , சூடம் சுத்திகிட்டே இருக்கீர்! போதும் பழனி போதும் …கடவுளே கடுப்புலே கிளம்பிட்டாரு பழனி!!
எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி.(ஆலயத்தை உடைக் காமளிருந்தால் )
டத்தோஸ்ரீ ஜி அவர்களே உண்மையில் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் இதை யே கொஞ்சம் மாத்தி யோசித்து பாருங்கள் ஏன் இந்தியர்களின் சமயத்தை இந்த அளவுக்கு சிறுமை படுத்துகின்றார்கள்
Typed wi
டி மோகனும் சிவராசும் கோவில் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அனால், நீரோ கோயில் உடைபடவில்லை என்று சொல்கிறீர்கள் !!!!
தோ….பாருங்கையா….ம இ கா காரனுங்க நல்லா பிலிம் காட்டுறானுங்க…..!!!!!!
நம் நாட்டில் இவ்வகையான குட்டி கோவில்கள் எண்ணிலடங்கா…!!இங்கே தெய்வத்துக்கு பஞ்சம் இல்லை,சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை,பாபாக்களுக்கு பஞ்சம் இல்லை,குருஜிகளுக்கு பச்ஞம் இல்லை.இருந்தும் இந்த சமுதாயம் நாட்டு வளர்ச்சியில் பின்னால் தள்ளப்பட்டுள்ளது!!! ஏன்..ஏன்…ஏன்…? காரணம் இங்கு கூறப்பட்டுள்ள வழிபாடுகள் மனிதனின் சுல நலத்தினால் உருவானவை.இங்கு தூய்மையான பக்தி இல்லை.பக்தி என்ற பெயரில் வியபாரம் செய்வது.
முகுந்தா….ஒருவரின் பக்தியை சரியாக மதிப்பிடக்கூடியவன் அந்த ஆண்டவன் ஒருவனே! பெரிய கோவிலுக்குச் செல்பவர்கள் எல்லாம் பக்தி நிறைந்தவர்கள் என்று சொல்லிட முடியுமா? குட்டி கோவிலாக இருந்தாலும் அது எத்தனை ஆண்டு பழமை வாய்ந்தது. அதை அப்புறப்படுத்த வேண்டி இருந்தாலும் அதை முறைப்படி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தாமல் செய்ய வேண்டுமல்லவா! ஒரு சூராவை குட்டி மசூதி என்று சொல்லி நீங்கள் உடைத்துவிடுங்கள் பார்ப்போம்!