ஸ்ரீபெர்டானாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் மின்சாரக் கட்டணமாக ரிம 2.2 மில்லியன் செலவிடப்பட்டாலும் அதன் பராமரிப்புச் செலவு உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது “குறைவுதான்” என பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.
அந்த வளாகத்தைப் பராமரிக்க சிக்கனமாகத்தான் செலவிடப்பட்டு வருவதாக ஷஹிடான் மக்களவையில் கூறினார்.
ஆனால், மற்ற நாடுகளில் அதிகாரத்துவ இல்லங்களின் பராமரிப்புக்குச் செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதைச் சொல்லவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“பார்த்ததை வைத்துக் கூறுகிறேன். ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்வதென்றால் அதற்குப் போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்”, என்றார்.
மின்சாரத்தை ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி சாப்பிடுவார்களா! போனால் போகட்டும்! தெனாகா நேஷனலிடம் கமிஷன் வாங்காமல் இருந்தால் சரி!