மரினா மகாதிர், தாம் கோமாங்கோ மனித உரிமை கூட்டமைப்பை வழிநடத்துவதாகக் கூறிய ஒரு முஸ்லிம் அமைப்பு அவ்வாறு சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரினார். தவறினால் அதன்மீது வழக்கு தொடுக்கப்படும்.
“ஈக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) அமைப்பு, வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கையில் கோமாங்கோவைப் பின்னணியில் இருந்து வழிநடத்தி வருவோரில் நானும் ஒருவர் என்று கூறப்பட்டிருந்தது.
“அதில் உண்மை அன்று. நான் இஸ்லாத்தில் சகோதரிகள் (எஸ்ஐஎஸ்) அமைப்பில் வாரிய உறுப்பினர். ஆனால், கோமாங்கோவை இயக்குவதில் நான் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை”, என மரினா மகாதிர் ஓர் அறிக்கையில் கூறினார்.
வாங்க ma….பனம் செல்வாக்கு பரிபோயடுமோ என்று பெர்சிஹ் போன்ற பொதுசேவை சங்ககளில் இருந்து விலகிட்டநீ எல்லாம் பேசுறிங்க……