வெள்ளிக்கிழமை நாட்டில் இடி, மழை, பூகம்பம்: பழனிவேல் பிரதமரிடம் பேசப் போகிறார்!

1 palaniவெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறீ லங்காவில் கூடும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்துகொள்ளும் பிரச்னை குறித்து மஇகா தலைவர் ஜி. பழனிவேல் பேசப் போகிறார்.

சிறீ லங்கா அரசு அந்நாட்டு தமிழர்களை தவறாக நடத்தியது குறித்து மலேசிய தமிழர்களும், இதர நாட்டிலுள்ள தமிழர்களும் சினமடைந்துள்ளதை பழனிவேல் ஒத்துக் கொண்டார்.

“நான் அவரிடம் (பிரதமர் அப்துல் ரசாக்) வெள்ளிக்கிழமை பேசப் போகிறேன்.

“மாநாட்டை அவர்கள் வேறு எங்காவது, சிங்கப்பூர், மலேசியா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் நடத்தினால், அது ஓகே. (ஆனால்), சிறீ லங்காவில் செய்வது…எல்லாருக்கும் கோபம்”, என்றாரவர்.

சிறீ லங்கா மாநாட்டை நஜிப் புறக்கணிக்க வேண்டும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூட நஜிப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து பழனிவேல் ஆச்சரியமடைந்தார்.