மகாதிர்: முஸ்லிம்கள் மறுமை வாழ்வைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது

mahaமக்கள், மறுமை வாழ்வுக்கு ஆயத்தமாவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது போதாது. முன்னேற்றம் காண விரும்பினால் இம்மை வாழ்வில் தொழில்நுட்ப அறிவு பெறுவதிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தியுள்ளார்.

அரபு உலகம் சமய அறிவைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருந்ததால்தான் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றாரவர்.

“தொழில்நுட்ப அறிவுக்கு மறுமை வாழ்வில் மதிப்பில்லை என்று முஸ்லிம்கள் முடிவு செய்து விட்டார்கள்.

“சமய அறிவுக்கு மட்டுமே மறுமை உலகில் மதிப்பு என்றவர்கள் நினைக்கிறார்கள்”. இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில், முஸ்லிம் உலகில் கல்வி மீதான அனைத்துலக மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய மகாதிர் இவ்வாறு கூறினார்.