வேதா கூறிவிட்டார்: இந்து விவகாரங்களில் தலையிட தெங்கு அட்னானுக்கு உரிமை இல்லை

vedaஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் சில பகுதிகள் உடைக்கப்பட்டதைத் தற்காத்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி சாடினார். “சிறிய கோயில், பெரிய கோயில் என்று விளக்கமளிக்கும் தகுதி” தெங்கு அட்னானுக்கு இல்லை என்றாரவர்.

நீண்ட மவுனத்துக்குப் பின் வாய் திறந்துள்ள பிரதமர்துறை  துணை அமைச்சரான வேதமூர்த்தி, “இந்து சமயம் தொடர்பான விவகாரங்கள் பற்றி அறிக்கை விடும் உரிமை” தெங்கு அட்னானுக்குக் கிடையாது என்றார்.

“கூட்டரசு அமைச்சர் என்ற முறையில் அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமே தவிர; கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்தின் அநியாயமான செயலை நியாயப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது”, என்று வேதமூர்த்தி கூறினார்.