பக்கதான்: பிரதமர் சிறீ லங்கா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

limஇம்மாதம் சிறீ லங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கத்தான் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறீ லங்கா அரசின் மோசமான மனித உரிமை மீறல்களை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறீ லங்காவில் நடந்த உள்நாட்டில் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அரசாங்கம் இன்னும் பொறுப்போற்கவில்லை என்று டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் இன்று கூறினார்.

குவான் எங் விடுத்த வேண்டுகோளை சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹன் அப்துல்லா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆதரித்துப் பேசினார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து செனட்டர்கள் சிறீலங்காங்காவுக்கு வருகையளித்த பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் அந்நாடுகள் உச்சநிலை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளதை ஜோஹன் சுட்டிக் காட்டினார்.

TAGS: