காஜாங் முனிசிபல் மன்ற (எம்பிகேஜெ) கவுன்சிலர்களுக்கும் தலைவருக்குமிடையில் நிலவும் சர்ச்சைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காண முடியாமல் தத்தளிப்பதாக மசீச குறைகூறியுள்ளது.
அச்சர்ச்சை பல மாதங்களாக நீடிக்கிறது என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் யாப் பியான் ஹொன் தெரிவித்தார்.
“அவர்களின் சர்ச்சையால் காஜாங் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்று வினவுகிறார்கள்.
“எதுவும் அதிகாரப் போராட்டமா அல்லது அதிகார அத்துமீறலா அல்லது ஆதாய முரணா? எதுவாக இருந்தாலும் மாநில அரசு வெளிப்படையாக உண்மை உரைத்திட வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
“சர்ச்சை பல மாதங்களாக தொடர்ந்தாலும் மாநில அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. அதன் விளைவாக அது, எம்பிகேஜெ-இன் பரம இரகசியங்களை மூடிமறைக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் உண்டாகியுள்ளது”, என்றாரவர்.