நீதிமன்றத்தை அவமதித்த இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறை

1 ibrahimநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது.

சைனுடின் சாலே எழுதிய கட்டுரை ஒன்றை பெர்காசா வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக அவருக்கு இத்தண்டனை.

அக்கட்டுரையில் இப்போது பணிஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி  வி. டி. சிங்கத்தின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சைனுடின், அக்கட்டுரையில், உத்துசான் மலேசியாவுக்கு எதிராக மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதியாக பணியாற்றிய சிங்கத்தை மாற்றரசுக் கட்சிகளுக்கு ஆதரவானவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி ஒரு பிரமச்சாரி என்பதால் அவரது பாலியல் விருப்பு பற்றியும் சைனுடின் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்காகக் கட்டுரையாசிரியருக்கு நான்கு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை நீதிபதி ஜான் லூயிஸ் ஓ’ஹாரா விதித்தார்.