பிஎஸ்என் தலைவர் நியமனம் குறித்து பாஸ் கேள்வி எழுப்பியது

1 mafuzபொதுச் சேவைத்துறை இயக்குனராக இருந்தபோது ‘பொதுநலன் கருதி’ பணிநீக்கம் செய்யப்பட்ட அபு பக்கார் அப்துல்லா, பேங்க் சிம்பானான் நேசனல் (பிஎஸ்என்) தலைவராக நியமிக்கப்பட்டது எப்படி என்று பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று, பாஸின் பொக்கொக் சேனா எம்பி மாபுஸ் ஒமாருக்கு வழங்கிய எழுத்துவடிவிலான பதிலில் பிரதமர்துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம், 2012-இல் அபு பக்கார் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.

அபு பக்கார் பொதுநலனுக்கு விரோதமான ஒரு குற்றத்தைப் புரிந்தவர் என்றால் அவருக்கு பிஎஸ்என் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கக் கூடாது என மாபுஸ் கூறினார்.

“ஒழுக்ககேடாக நடந்து கொண்ட அவருக்கு வங்கித் தலைவராகும் தகுதி எப்படி வந்தது?”, என மாபுஸ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

ஷாஹிடான், 1993ஆம் ஆண்டு அரசு ஊழியர்களின் விதிமுறைகளின்படி 49வது விதியின்கீழ் அபு பக்கார் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினாரே தவிர அவர் செய்த குற்றம் என்னவென்பதைக் குறிப்பிடவில்லை.