அரசு பதவிகளிலிருந்து வெளியேறப் போவதாக பினாங்கு பாஸ் மிரட்டல்

1 pasபினாங்கு பாஸ், இஸ்லாமிய விவகாரங்களில் மாநில அரசின் “நியாயமற்ற தலையீடுகளுக்கும்” மாநில அரசு அமைப்புகளிலும் கிராம, பாதுகாப்பு மேம்பாட்டுக் குழுக்களிலும் அக்கட்சி  உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படும் முறைக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

அது தொடருமானால் பக்காத்தான் ரக்யாட்டில் தன் நிலை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என மாநில துணை ஆணையர் பவுசி யூசுப் கூறினார்.

இவற்றுக்கெதிராக ஆறு கோரிக்கைகளை முன்வைத்த அக்கட்சி, அவை புறக்கணிக்கப்பட்டால் மாநில அரசு பதவிகளிலிருந்தும் ஊராட்சி மன்ற பதவிகளிலிருந்தும் வெளியேற தயாராய் இருக்கிறது.