சிலாங்கூருக்கு உரிய நிதியைக் கொடுக்காவிட்டால் அதன் விளைவுகளை பிஎன் மீண்டும் அனுபவிக்கும்

1 khalidசிலாங்கூருக்கு உரிய நிதியைக் கொடுக்க பிஎன் மறுத்தால் அடுத்த தேர்தலில் அது மீண்டும் படுதோல்வியைச் சந்திக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

“2008-இலிருந்து சிலாங்கூருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நேரடி நிதி கிடைக்கவில்லை. மாறாக, அந்நிதி அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் வழியாக வழங்கப்படுகிறது”.  இது, சிலாங்கூர் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும் என்று குறிப்பிட்ட  மந்திரி புசார், அதற்காக மக்கள் 14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் பிஎன்னைத்  தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றவர் கூறினார்.

இன்று , 2014ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது காலிட் இவ்வாறு கூறினார்.