கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

carஅரசாங்கம்  கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் கொள்கையைக் கொண்டுவர  திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்த போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி,  அது “மாற்றரசுக் கட்சிகள் கட்டிவிட்ட கதை”, என்றார்.

“அரசாங்கத்திடம் அப்படி ஒரு திட்டம் இல்லை”, என  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

அங்கிருந்த சாலைப் பாதுகாப்பு ஆய்வுக்கழக(மிரோஸ்) தலைமை இயக்குனர் டாக்டர் வொங் ஷா வூனும், அப்படியொரு கொள்கையை அமல்படுத்துமாறு மிரோஸ் அரசாங்கத்துக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கவில்லை என்றார்.