அன்வார் இப்ராகிம், தம் இரண்டாவது குதப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டில் அரசுதரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமைதாங்குவதினின்றும் அம்னோ தொடர்புடைய வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவை நீக்க வேண்டும் என்று செய்துகொண்டிருந்த மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டிவிட்டரில் இதைத் தெரிவித்த பத்து தொகுதி எம்பி தியான் சுவா, அரசுதரப்பு வழக்குரைஞராக எவரையும் நியமனம் செய்யும் உரிமை சட்டத்துறைத் தலைவர் அப்துல் கமி பட்டேய்லுக்கு உண்டு எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகக் கூறினார்.
இத் தீர்ப்பைத் தொடர்ந்து குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கம் செய்துகொண்ட மேல்முறையீடு டிசம்பர் 11, 12 ஆகிய நாள்களில் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
நீதி தேவதையின் கண் கட்டியை அவிழ்த்து விட்டார்கள் போலும்? வாழ்க நீதி! ஒழிக அநீதி!
தேனீ அவர்களே,
நீங்கள் குறிப்பிட்டது நம் நாட்டில் ஒரு பொழுதும் நடக்காது…
நீதி எப்போதோ செத்து விட்டது…ஆளும் கட்சி சுயநலத்துக்காக நீதியை அழித்துவிட்டார்கள்…!!!!