சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் நீர் சுத்திகரிப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றைச் செய்துவரும் நான்கு நிறுவனங்களின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க தயாராகவுள்ளது. இதுதான் கடைசி விலை என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
இதை ஏற்பதா, இல்லையா என்பதை முடிவு செய்ய அந்நான்கு நிறுவனங்களுக்கும்- ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் (ஷபாஸ்), கொன்சோர்டியம் அப்பாஸ் சென். பெர்ஹாட்< புஞ்சாக் நியாகா சென். பெர்ஹாட், ஷியாரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹொல்டிங்ஸ்- டிசம்பர் 4வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆரம்பத்தில் செய்த முதலீட்டை விட இது எத்தனையோ மடங்குங்க.. மக்கள் பணம் எவென் எவனுக்கோ போகுது கோடி கோடியா…!