சீனமொழிக் கல்வி விவகாரத்தில் வெவ்வேறு தரப்பினர் கொண்டுள்ள வேறுபட்ட கருத்துகளுக்குத் தீர்வுகாணாவிட்டால் சீனர் சமூகமே “கேலிக்குரியதாக” மாறிவிடும் என கெராக்கான் எச்சரித்துள்ளது.
கல்வி விவகாரங்களில் பல்வேறு அமைப்புகள் கொண்டுள்ள மாறுபட்ட கருத்துகள் சீனர் சமூகத்தைப் “பிளவுபடுத்தி” இருப்பதாக கெராக்கான் மத்திய செயல்குழுத் தலைவர் டாக்டர் டொமினிக் லாவ் கூறினார்.
இந்நிலை தொடருமானால் அச்சமூகத்தால் அதன் உண்மையான தேவைகளையும் அவலங்களையும் அரசாங்கத்திடம் எடுத்துசொல்ல இயலாத நிலை ஏற்படலாம் என்றார்.