பெர்சே அனுபவங்கள் பற்றி அம்பிகா உரையாற்றுவார்

1 ambigaஅடுத்த புதன்கிழமை, ஒரு விருந்து நிகழ்வில் பெர்சே-இன் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உரையாற்றவுள்ளார்.

‘பெர்சே-இல் கற்றுக்கொண்டது’ என்ற தலைப்பில் அம்பிகா உரையாற்றுவார். தேர்தல் சீரமைப்புக்காக போராடும் இயக்கான பெர்சேக்கு மூன்றாண்டுக் காலம்  தலைமைதாங்கிய அனுபவத்தை அவர் அதில் எடுத்துரைப்பார்.

மலேசியாகினியின் புதிய கட்டிடமான @KINI க்கு நிதி திரட்டுவதற்காக அவ்விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2009-இல் அனைத்துலக வீரப் பெண்மணிகளுக்கான விருதை அமெரிக்காவிடமிருந்து பெற்றவரும், மனித உரிமைப் போராட்டதுக்காக பிரான்சிடமிருந்து 2011-இல் Legion of Honour பட்டத்தைப் பெற்றவருமான அம்பிகா, சுதந்திரமாக செயல்படும் மலேசியாகினிக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் அவ்விருந்தில் கலந்துகொள்வதாகக் கூறினார்.

“மலேசியாகினி இணைய இதழியலில் ஒரு முன்னோடி. அது, மலேசியர்களுக்கு முன்பு கிடைக்காதிருந்த  செய்திகளைக் கிடைக்கச் செய்யும் ஒர் ஊற்றுக்கண்ணாக இருப்பதுடன் துணிச்சலான, சுதந்திரமான இதழியலுக்கும்  எடுத்துக்காட்டாக மிளிர்கிறது”,எனக் குறிப்பிட்டார்.

விருந்து பெட்டாலிங் ஜெயாவில், ஜெயா ஒன்-னில் உள்ள  Chili Rush உணவகத்தில் நடைபெறுகிறது. கலந்துகொள்பவர்கள் கட்டிட நிதிக்கு ரிம100 செலுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர்கள்  மின்னஞ்சல்வழி  இடத்துக்கு முன்பதிவு செய்யலாம். மின்னஞ்சல் முகவரி [email protected]