தியோ பெங் ஹோக் குடும்பத்தினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் இதர 13 பேருக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கவிருந்த தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் போர்ந்திப் ரோஜானாசுனந்தி மலேசியா வருவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால் “அரசியில் குறுக்கீடு” இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாதியின் வழக்கு கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில், போர்ந்திப் ஒரு சாட்சியாக நீதிமன்றத்திற்கு வர இயலாமல் இருக்கிறார் என்று தியோ குடும்பத்தினரின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கூறினார்.
“நமது (மலேசியா) அரசாங்கமும் தாய் அரசாங்கமும் மேற்கொண்டுள்ள அரசியல் குறுக்கீட்டின் காரணமாக அவர் விசாரணையில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கிறார்”, என்று கோபிந்த் கூறினார்.
போர்ந்தி இவ்வழக்கில் தியோ குடும்பத்தின் முக்கியமான சாட்சி ஆவார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் அரசியல் உதவியாளராகப் பணியாற்றிய தியோ, 30, ஜூலை 16, 2009 இல் ஷா அலாம் பிளஸா மசலாம் 14 ஆவது மாடியில் இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆனையத்தின் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
உண்மை பேசுபவர்களை விரும்புவது என்றுமே எங்கள் மரபன்று. பொய்மையே எங்கள் ஆட்சியின் தூண்கள்.