கெப்போங்கில் எரிஉலை கட்டப்படுவதை எதிர்க்கும் KL Tak Nak Insinerator (கேடிஐ) இயக்கம், நாளை நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக செல்வதற்கு முன்னர் அவ்வியக்கத்துக்கு வலுச் சேர்க்க நேற்று ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அக்கூட்டத்திற்கு வந்திருந்தோர் எண்ணிக்கை உற்சாகம் தருவதாக இல்லை.
சுமார் 200 பேர்தான் வந்திருந்தனர். கூட்டம் குறைவு என்பதை ஒப்புக்கொண்ட கேடிஐ செயல்குழு உறுப்பினர் லாம் சொங் வா, இது இயக்கத்தின் தொடக்கக் காலம்தானே என்றார். அது அவ்வியக்கம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது செராமாவாகும்.
2006-இல், செமிஞியில் நடந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அங்கு மூன்றாண்டுகளில் 200 செராமாக்கள் நடத்தப்பட்ட பின்னர்தான் ஒரு எரிஉலைக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது என்றார்.