இனவாதத்தை சாமாளிக்க புதிய ஒற்றுமை மன்றம்

1 nuccபல்வேறு துறைசார்ந்த 29 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (என்யுசிசி) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.  தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் புதிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்து முடிவெடுக்க  அதற்கு ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமநிதி தலைவர் ஷம்சுடின் ஒஸ்மானைத் தலைவராகக் கொண்ட  அம்மன்றம்,  அதன் பரிந்துரைகளை அமைச்சரவையிடம்  வழங்கும்.

அம்மன்றத்தைத் தொடக்கிவைத்த  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,  அப்புதிய அமைப்பில் உணர்ச்சி வசப்பட வைக்கும் விவகாரங்களை, எடுத்துக்காட்டுக்கு முஸ்லிம்-அல்லாதார் “அல்லாஹ்” என்று சொல்லாமா என்பது குறித்து விவாதிக்கலாம்,  வீடமைப்பு, சபா, சரவாக் விவகாரங்கள் போன்றவற்றையும் விவாதிக்கலாம் என்றார்.

ஆனால், மன்றம் இரகசியமாகத்தான் கூட்டங்களை நடத்தும்.

“சர்ச்சைக்குரிய  விவகாரங்களைப் பொதுவில்  விவாதித்தால்  இனங்களுக்கிடையல்  உறவுகள் கெடும்.  அது  நல்லதல்ல.  அதனால்தான் ஆலோசனை மன்றக் கூட்டத்தை  இரகசியாக நடத்த வேண்டியுள்ளது. அதில் எதையும் ஒளிவுமறைவு இல்லாமல்  மனந் திறந்து விவாதிக்கலாம்”, என  நஜிப் கூறினார்.

இதைப்பற்றி கருத்துரைத்த சுவராம் தலைவர் கா. ஆறுமுகம், “தேசிய முன்னணி என்ற பெயரில் உண்டாக்கப்பட்ட அம்னோ இனவாதத்தை இந்த மன்றம் கலைய முற்படும் என்ற நம்பிக்கையில்லை. ஆனால், அவற்றை பேசுவதற்கு இது தலமாக இருக்கும்” என்றார். முற்றிப்போன புற்று நோயியுக்கு மருந்து தேடும் படலம் என்கிறார், “நோய் எந்த அளவு பரவியுள்ளதை என்பதையாவது கணிக்கட்டும்”.