சாலைக்கட்டணத்தை நீக்குவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்

1 tollநாடு முழுக்க சாலைக்கட்டணங்களை எடுப்பது அரசாங்கத்துக்கு நிதிச் சுமையை உண்டாக்கும், முடிவில் அது முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் சிதறடித்து விடும் என்கிறார் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப்.

சாலைக்கட்டணங்களை நீக்குவது அரசாங்கத்தின் வருமானத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“அத்துடன்  ஒப்பந்தங்களையும் மதிக்க வேண்டும்”. சாலைக்கட்டண வசூலிப்பாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத்தான் அவர் குறிப்பிட்டார்.

1 toll 1”ஒப்பந்தங்களை மதிக்கவில்லை என்றால் அது முதலீட்டாளர்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும்”, என்றார்.

தேர்தலில் வாக்குறுதி அளித்ததுபோல் அரசாங்கம் சாலைக்கட்டணத்தைக் குறைக்குமா என்று ஹீ லோய் சியான்(பிகேஆர்- பெட்டாலிங் ஜெயா செலாத்தான்) கேட்ட கேள்விக்கு இப்படி பட்டும் படாமலும் பாடில்லா பதிலளித்தார்.

“ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். ஆனாலும், சாலைக்கட்டணத்தைக் குறைப்பது பற்றி பேச்சு நடத்தி வருகிறோம்”, என்று அமைச்சர் மேலும் சொன்னார்.