அம்பிகா: முன்னாள் இசி-தலைவர் பிஎன் எடுபிடி என்று கூறப்படுவதை நிரூபித்திருக்கிறார்

1 ecமுன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவில் சேர்ந்திருக்கிறார்.

அரசியல் அதிகாரம் மலாய்க்காரர்களிடம் இருப்பதை உறுதிசெய்யவே பெர்காசாவில் சேர்ந்ததாகக் கூறிய அப்துல் ரஷிட், மலாய்க்காரர்களை அதிகாரத்தில் வைத்திருப்பது முன்னாள் இசி தலைவரான தமக்குக் கைவந்த கலை என்றார்.

தம் பதவிக்காலத்தில் மும்முறை தேர்தல் எல்லைத் தொகுதிகள் திருத்தப்பட்டு மலாய்க்காரர்கள் ஆட்சியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

1 ambikaஅது பற்றிக் கருத்துரைத்த பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், எப்படித் திருத்தி அமைத்தாலும் ஆட்சி அதிகாரம் என்றும் மலாய்க்காரர் கைகளில்தான்  இருக்கும், ஏனென்றால்  அவர்கள்தான் பெரும்பான்மையினர் என்றார்.

“தேர்தல் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டது ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமைந்தது என்று சொல்வது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.  அதைத்தான் நாங்கள் எப்போதும் சொல்லி வந்திருக்கிறோம்- அது உண்மை என்பதை அவர் நிரூபித்துள்ளார்”, என அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.

அப்துல் ரஷிட் , கூட்டரசு அரசமைப்பைப் பின்பற்றாமல் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் தேர்தல் எல்லைகளைத் திருத்தி அமைத்திருக்கிறார் என்றாரவர்.