அனிபா: மலேசியாவுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளை ஆராய்வோம்

1 spyமற்ற நாடுகள், குறிப்பாக சிங்கப்பூர் மலேசியாவில் வேவுபார்த்ததாகக் கூறும் ஊடக தகவல்களில் உண்மை உண்டா என்று மலேசிய அதிகாரிகள் தீர்க்கமாக ஆராய்வார்கள்.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் தூதரை அழைத்து விளக்கம் கோரப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் கூறினார்.

“நல்ல நட்பு கொண்ட அண்டை நாட்டை வேவுபார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதுடன் அது  அண்டைநாட்டு நல்லுறவுக்கும் விரோதமானது”, என அனிபா குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தின் வேவுபார்க்கும் நடவடிக்கைகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியவரான  எட்வர்ட் ஸ்னோடன்,   உளவுபார்க்கும் நிறுவனமொன்று சிங்கப்பூரின் உதவியுடன் மலேசியாவில் உளவுபார்த்த விவகாரத்தை  அம்பலப்படுத்தியிருப்பதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

-பெர்னாமா