பகாங் சட்டமன்றம் பிகேஆர் உறுப்பினரை இடைநீக்கம் செய்தது

1 dewanபகாங் சட்டமன்றம், மாநில பட்ஜெட் உபரியைப் “பொய்” என்று கூறிய பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்கை இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதினின்றும் தள்ளி வைத்தது.

உரிமை, சலுகைக் குழுவில் தம்மைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என லீ கூறினார்.

லீயை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 29 பேரும் எதிராக 12 பேரும் வாக்களித்தனர்.

“மரியாதைக்குறைவான” சொல்களைப் பயன்படுத்தினார் என்று கூறி மந்திரி புசார் அட்னான் யாக்கூப் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

“இது இங்கிருப்பது போலியான ஜனநாயகம் என்பதைக் காண்பிக்கிறது”, என லீ கூறினார்.

“இது மக்கள் மன்றமல்ல. அட்னானின் மன்றம்”, என்றாரவர்.