தேர்தல் ஆணையம்(இசி) விரைவில் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், அது மலாய்க்காரர் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் யூசுப் கூறுகிறார்.
அரசியலமைப்பைப் பின்பற்றி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
“மலாய்க்காரர் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதில்லை”, என அப்துல் அசீஸ் மலேசீயாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறி இருந்தார்.
அப்படியா…!!!!!
முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான் வேறு மாதிரியல்லவா அறிக்கை விட்டுள்ளார்.
தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையானது நாடாளுமன்றத்தின் 2/3 பங்கு அனுமதியுடன் திருத்தி அமைக்கப்பட்டால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்….
குறிப்பு:
25,000 வாக்காளர்கள் கொண்ட தொகுதிக்கும் ஒரு எம் பி, 125,000 வாக்காளர்கள் கொண்ட தொகுதிக்கும் ஒரு எம் பி. இது எவ்விதத்தில் நியாயம்????
நீங்கள் அப்படித்தான் சொல்லுவீர்கள் என்று அப்போதே எங்களுக்குத் தெரியும். வேறு மாதிரி சொன்னால் தான் ஆச்சரியம்!
நீங்கள் சொல்வதை நாங்கள் negatif பாக எடுத்து கொள்வோம் அதுதான் சரியாக இருக்கும். அதிக மலாய்காரர் தொகுதியில் அம்னோ தோற்பது உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது.
ஐயா மண்டோரே! 25,000 பேர் கொண்ட தொகுதிக்கும் ஒரு MP. 125,000 பேர் கொண்ட தொகுதிக்கும் ஒரு MP, என மொட்டையாக சொன்னால் எப்படி? ஆதாரங்களை எடுத்து வையுங்கள். அதற்கென்ன, இதோ tips. தீபகற்ப மலேசியாவில், கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதிக்கு வெறும் 28,043 வாக்காளர்களே. காப்பார் தொகுதியில் 144,369 வாக்காளர்கள். சரவாக்கில், பாத்தாங் சடோங்,லுபோக் அந்து, தஞ்சோங் மானிஸ்,இகான்,கநோவிட், லாவாஸ், ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தலா 19,000 வாக்காளர்களே.[‘களவும் கற்று மற’ என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், ‘நம்மவர்கள்’, நடிகை அசின் என்ன உடை உடுத்தினார் என்பதை தெரிந்து வைத்திருப்பார்களே ஒழிய, அரசியலை அறிய முனைப்பு காட்டுவதில்லை]
என்ன சார் (அப்துல் அசீஸ் )மக்கள் என்ன மடையர்களா? திரு.சிங்கம் எழுதிய கூற்று சரியானதே.
இவன் மூஞ்சியும் முகரையும்…