மலேசியாகினி கட்டிட நிதி: பினாங்கு கெராக்கான் தலைவர் ஒரு கல் வாங்கினார்

bataமலேசியாகினியின் கட்டிட நிதிக்கு உதவியாக பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ ரிம1,000 கொடுத்து ஒரு கல் வாங்கினார்.  அவரே கட்டிட நிதிக்குக் கொடை வழங்கிய  முதலாவது பிஎன் தலைவர் ஆவார்.

“மாட் சாபு அதற்குக் கொடை வழங்கினார் என்றால் அரசியல் நோக்கத்துடன் செய்தார். நான் பத்திரிகைச் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன். அதனால் நன்கொடை அளித்தேன்”, என்று தெங் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, செக்‌ஷன் 51-இல் வணிக பூங்காவில், ரிம7 மில்லியன் செலவில் @Kini கட்டிடம் உருவாகிறது. கட்டிட நிதியின்வழி  ரிம3 மில்லியன்  திரட்டுவது மலேசியாகினியின் இலக்கு.

இதுவரை 240 ஆதரவாளர்கள் மொத்தம் ரிம282,000 கொடுத்து கற்களை வாங்கியுள்ளனர்.