பள்ளிப் பாதுகாப்பு தனியார்மயப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம் “அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை” என்பதால் பொதுகணக்குக் குழு (பிஏசி) கல்வி அமைச்சர்கள் இருவரில் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறது.
அவ்விவகாரத்தில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால், அதைச் சரிப்படுத்துவதில் அமைச்சு உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிக்க துணைப் பிரதமர் முகைதின் யாசின் அல்லது இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூஸோ பிஏசி-இன் விசாரணைக்கு வர வேண்டும் என அதன் தலைவர் நூர் ஜஸ்லான் விரும்புகிறார்.
பள்ளிகளின் பாதுகாப்புக்கான செலவு கடந்த மூன்றாண்டுகளில் பன்மடங்கு உயர்ந்திருப்பதைக் கருத்தில்கொண்டு அதில் உள்ள பலவீனங்களைக் களைந்து பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்றாரவர்.
கோமாளிகள் நாடகம் ஆடுகிறார்கள்