வேவுபார்த்த விவகாரத்தைவிடவும் கோமாங்கோ விவகாரம்தான் பிஎன்னுக்கு பெரிதாக போய்விட்டது

1 anwarபிஎன் அரசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியவை  கோலாலும்பூர் நடவடிக்கைகளை வேவுபார்த்ததாகக் கூறப்படுவது பற்றி அதிகம்  அலட்டிக்கொள்வதில்லை ; ஆனால், மலேசிய என்ஜிஓ கூட்டமைப்பு (கோமாங்கோ) ஐநா மனித உரிமைகள் மன்றத்தில்   கோரிக்கைகள் சமர்ப்பித்ததுதான் அதற்குப் பெரிதாக தெரிகிறது என  மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார்  இப்ராகிம் கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “அந்த விவகாரம் (கோமாங்கோ)  மிகைப்படுத்திப் பேசப்படுகிறது.  ஆனால் வேவுபார்க்கப்பட்டது பற்றிப் பேசினால்  அமைதியாகி விடுகிறார்கள்”, என்றார்.

இதில் அரசாங்கம் “சாதுவாக” நடந்துகொள்கிறது என அன்வார் சாடினார்.

“வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் அல்லது பிரதமரின் காரசாரமான அறிக்கை எங்கே?”, என்றவர் பொறிந்து தள்ளினார்.