நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியா கோலாலம்பூர், ஸ்ரீ மூனீஸ்வர் கோயில் பகுதி உடைக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா எழுப்புவதிலிருந்து அவரை நிறுத்தியதோடு நாடாளுமன்ற நடவடிக்களைத் தாமதப்படுத்தியதற்காக அவரை அவையிலிருந்து வெளியேற்றினார்.
அடுத்து, வி.சிவகுமார் (டிஎபி-பத்துகாஜா) வெளியேற்றப்பட்டார். இக்கோயில் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்ற அவைத் தலைவரின் முடிவு குறித்து கேள்வி கேட்டதற்காக சிவகுமாரை அவையின் துணைத் தலைவர் முகமட் ஸைட் வெளியேற்றினார்.
ஆர். சிவராசா இக்கோயில் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக வெளியேற்றப்பட்ட இரண்டாவது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
முதலாவதாக என். சுரேந்திரன் வெளியேற்றப்பட்டார்.
சிவராசா இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதைத் தடுக்கும் போது அவைத் தலைவர் பண்டிகர், “இப்பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. இது முன்பே எழுப்பப்பட்டுள்ளது”, என்று கூறினார்.
எதிர்க்கட்சி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே, கோவில் தமிழ் பள்ளிக்கூடம் என்று அன்றாடம் பேசிப் பேசி உங்கள் அரசியல் வாழ்க்கையை நடத்துவதை விட்டு விட்டு, இந்நாட்டில் வாழும் இந்தியர்களின் பொருளாதாரம், தரமான மேல்நிலைக் கல்வி, ஏழைகளுக்கு வீட்டுடைமை போன்ற அத்தியாவசியமான, அவசரமானா தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுங்கள். அம்னோக்காரன் “அன்றாடம்” நமக்கு கோவில், தமிழ்ப் பள்ளி பிரச்சனைகளைக் கொடுத்து கொண்டு, நமக்கு அத்தியாவசியமான மற்ற “தேவைகளில் கவனம் செலுத்தாத வண்ணம்” பார்த்துக் கொள்கின்றான். இதையும் புரிந்துக் கொள்ளாமல், நீங்கள் செய்யும் அறிவிலிதனத்துக்கு இந்தியர்களையும் பலிகடா ஆக்கி விடாதீர்கள். கொஞ்சம் அறிவாளியாக சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள். நீங்களும் உருப்படுவீர்கள், நாங்களும் உருப்படுவோமாக!
இந்த ‘பண்டி’ கர் அமின் முலியா சபா மாநிலத்தை சேர்ந்தவர். சபாவில் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இந்தியர்கள் இருப்பதால், இந்தியர்களின் கலை, கலாச்சாரம், சமயம் போன்றவற்றை, இந்த ‘அறிவாளி’ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலோ என்னவோ, தமக்கு புரியாத ஒரு விஷயத்தை, அவையில் கேள்வியாக உருவெடுத்ததை அவர் விரும்பவில்லை போலும். ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், பல இன மக்கள் வாழும் மலேசியாவில், ஒரு இனத்தை மதிக்கத் தெரியாதவனுக்கேல்லாம், அல்லது ஒரு இனத்தின் பண்பாடுகலையோ அல்லது உணர்வுகளையோ அறியாதவனெல்லாம் ஒரு மக்களவையில் சபாநாயகராக பொறுப்பேற்ற வைக்கலாமா? இது என்ன ‘சத்து’ மலேசியாவா? ‘செத்த’ மலேசியாவா?
பழனிவேலு சுப்ரா கோவில் விவகாரம் சம்பந்தம் இல்லையா ?
வாயில் நஜிப் பழமா?
இந்த பண்டி ..கார் கேள்வி கேட்கும் எல்லோரையும் வெளியாக்கிவிட்டு
கடைசியில் இவர் தனிமையாக தான் அமர்ந்திருப்பார் பொலும்.
யாருங்க்கடா இந்த பண்டி ,,கோவில் விவகாரத்தை பேசினால் என்ன தப்பு இருக்கு ? வெளி நாட்டில் உள்ள கோவில் விவகாரதையா பேசினார்கள் ,?மலேசிய மண்ணில் கட்ட பட்ட கோவில் விவகாரத்தை பற்றி தானே பேசினார் ,,இந்த சபா காரனுக்கு மூளையே இல்ல ,நாசமாபோனவன ,இவனுங்களுக்குதான் மதம் ,மொழி கிடையாது ,,,a b c யும் ஜாவி எழுத்தும் இவனுங்களுக்கு சொந்தம் கிடையாதே ,இவனுங்களுக்கு கடவுளே கிடையாது ,,அப்புறம் எப்படி மற்ற இன கடவுள்களை மதிக்க போறானுங்க ,மொட்ட தல பயல்க
பேசபடாத விவகாரம் எப்படி தீர்க்கப்படதாக கருத முடியும்?
தேனீ சொன்னதே சரியானது. பொருளாதாரம், தரமான மேல்நிலைக் கல்வி, ஏழைகளுக்கு வீட்டுடைமை போன்ற அத்தியாவசியமான, அவசரமான தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுங்கள்.
ஆனால் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகளில் மட்டும், சற்றும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
தாய்மொழியே முதன்மை ஆனது.
ஜாலான் பி ரம்லி கோயில் ஒரு சுய வருமானத்திற்காக ஒரு குடும்பத்தால் காண்டீனாக நடத்தப்பட்டு வந்த ஒரு சென். பெர்ஹாட் கோயில். வேலை வெட்டி இல்லாத பக்கத்தான் எம்.பி.கள் அந்த கோயிலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்டுகிட்டு இருக்காணுங்க.
ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கோவில்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். தமிழ்ப்பள்ளிகள், மொழி சார்ந்த பிரச்சனைகளில் விட்டுக்கொடுக்காதீர்கள். அதுவே எமது வேண்டுகோள்.