கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு 2014 ஜனவரியில் அமலாக்கப்படும், அது தள்ளிவைக்கப்படாது எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார்.
ஆனால், வரிசெலுத்துவோர் உடனடியாக அதைச் செலுத்த வேண்டியதில்லை. மார்ச் மாதம்வரை அவர்கள் காத்திருக்கலாம். அதற்கிடையில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
இது, நேற்று துணை அமைச்சர் லோக பால மோகன் சொன்னதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. வரி உயர்வு மார்ச் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார்.
நாளொரு மேனி பொழுதொரு பேச்சு . சிறந்த அம்னோ வாதிகள் .