மூன்றாண்டுகளுக்குமுன் பேராக்கில் குனோங் ரபாட் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்துக்கு ரிம2.5மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அளித்த வாக்குறுதியைத் துணைப் பிரதமர் முகைதின் நிறைவேற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் வலியுறுத்தினார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர், அப்பள்ளி அதன் விரிவாக்கத்துக்காக 2.4 ஏக்கர் நிலத்தைப் பெற்ற பிறகு, ஈப்போவில் ஒரு கூட்டத்தில் பேசிய முகைதின் அவ்வாறு வாக்குறுதி அளித்தார் என பத்து காஜா எம்பி, வி. சிவகுமாரும் கோப்பெங் எம்பி லீ போன் சையும் கூறினர்.
ஆனால், பணம் இன்னும் வந்து சேரவில்லை. அதனால் பள்ளி அதிகாரிகள் அதன் தொடர்பில் ஒரு மகஜரை முகைதின் தலைமையில் இயங்கும் கல்வி அமைச்சிடம் வழங்க இன்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர்.
கொடுக்காமல் இறிப்பது நல்லது ,அப்படியே கொடுத்தாலும் மா இ கா ,இல்ல PIBG பாக்கெட்டு நிறைந்து விடும் .பணத்தை வடிகட்டி அவன் அவன் பொண்டாட்டிக்கு இடுப்பிலே ஓட்டியான் வாங்கி அழுகு பார்திருவானுங்க ஜாக்கிரதை !ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
எங்கிருந்து வந்தாய் மோகன்? மேற்கூறிய பள்ளியில் படிக்கும் ஏறக்குறைய 400 மாணவர்கள் அரைகுறையான வசதிகளுடன் படிப்பை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அவசரமாக ஒரு புதிய பள்ளிக்கூடம் தேவைப்படுகின்றது. 13-வது தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் அடிக்கல் நாட்டி போஸ் கொடுத்த டத்தோ வீரவையும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் எதை கொண்டு அடிப்பது என்றே தெரியவில்லை. தத்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் படிக்க வைக்காமல் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருப்பதை விட வேலையை ராஜினாமா செய்து விட்டு போங்கள். தமிழ் பள்ளியும், அப்பள்ளி மானவர்களும் உருப்படுவார்கள். இல்லையேல் இப்பள்ளியின் நிலைப்போல் இன்னும் ஏராளமான தமிழ் பள்ளிகள் தகுடு தாளம் போட வேண்டி இருக்கும். இளைய தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் பல்கலைகழகங்களில் கற்றுக் கொண்டு வந்த கற்பித்தல் திறனைக் கையாள விடாமல் பல மூத்த ஆசிரியர் பெருச்சாளிகள் தமிழ் பள்ளிகளின் தரத்தை நாசப் படுத்துகின்றனர் என்று கேள்விப் படும் போது, எம் தமிழுக்கு வந்த சோதனையை நினைத்து வேதனைப் பட வேண்டி இருக்கின்றது. தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்களே மாறுங்கள், இல்லையென்றால் மாற்றப் படுவீர்கள்.
குனோங் ராப்பாட் தமிழ் பள்ளிக்கு ஒதுக்கிய நிதி வந்து பள்ளி கட்டி முடிப்பதற்குள் அப்பளியின் மாணவர்கள் எண்ணிக்கை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விடும் போலிருக்கு. டத்தோ கணேசன் கொஞ்சம் இறங்கி வேலை செய்யுங்கள். உங்கள் ம.இ.க. தேர்தல் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அப்புறம் அடுத்த தேர்தலுக்குள் உங்கள் அரசியல் அரிச்சுவடி காணாமல் போய் விடும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும் வாக்களித்தவர் துணைப்பிரதமர். தாய் மொழிப்பள்ளிகளை ஏளனமாக நினைப்பவர் துணைப்பிரதமர் என்னும் அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்!
என்ன மோகன் இப்படி பேசறீங்க .? இவன்கள் கொடுக்கிறோம் என்று சொன்னதே மலையளவு உள்ளது . இம்மியளவு கொடுத்துவிட்டு மலையளவு கணக்கு சொல்வார்கள் . இளிச்சவாயர்கள் நாம்தான் அடித்துக்கொள்ளவேண்டும் .
குரங்கு அப்பம் பங்கிட்ட கதைப்போலத்தான்..! கொடுத்த பணத்தை ம.இ.கா. காரன் பங்குப் போட்டு தின்னுட்டானோ..?
இவனுங்க கொடுத்தது சரித்திம் MOCK CEK மட்டும்தான் ஆனால் உண்மையா எதுவும் வராது அட போங்கப்பா வரும் ஆனா வராது அவன் மோகர கட்டய பாருங்களேன் அப்பனும் போல இல்லே!!!