இசி சுதந்திரமாக செயல்படுவதை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்

1 abdul rashidதேர்தல் ஆணைய  (இசி)த்தின்  சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு,  குறிப்பாக அது  தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி  அமைப்பதிலும் தேர்தல்களை நடத்துவதிலும்  சுதந்திரமாக செயல்படுவதை  உறுதிப்படுத்த  அரசமைப்பு, சட்ட வழிகாட்டல்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அதை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்  என மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம் (புரொஹெம்) ஓர் அறிக்கையில்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

அண்மையில் முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் (இடம்),  “தேர்தல் எல்லைகள் மூன்று தடவை திருத்தி அமைக்கப்பட்டு  ஆட்சி அதிகாரம் மலாய்க்காரர்கள் கைகளில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது”  என்று சொன்னதை  அறிந்து புரொஹெம் அதிர்ச்சி  அடைந்தது.

அவரது கூற்று  இசி-இன் சுதந்திரம்,  நம்பகத்தன்மை,  நடுநிலை ஆகியவைமீது சந்தேகம் கொள்ள வைக்கிறது என புரொஹெம் அறிக்கை கூறியது.