நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து

1 simபினாங்கில் பிஎன் தோற்ற தொகுதிகளில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சம்பளம் அரசாங்கக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் அவர்களுக்கு ரிம5,860, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரிம3,630 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்றார்.  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு விடையளித்தார்.

2009-இலிருந்து 2013வரை அவர்களுக்கு வழங்கப்பட்டது மொத்தம் ரிம7.25 மில்லியன்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளின் சம்பளம் ரிம6508.59 சென்தான். ஆனால், தேர்ந்தெடுக்கப்படாத பிஎன் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களின் சம்பளம் ரிம5,860. வேறுபாடு ரிம828 தான்”, என சிம் கூறினார்.

“பாயான் பாரு ஒருங்கிணைப்பாளார் யார் என்பதுகூட எனக்குத் தெரியாது. அவர்கள் மக்களுக்குத் தொண்டாற்றுகிறார்களா, இல்லை  gaji buta (வெட்டிச் சம்பளம்)வா?” என்றவர் வினவினார்.

“இன்று, (போக்குவரத்து அமைச்சர்) ஹிஷாமுடின் உசேன் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வைச் சுட்டிக்காட்டி பக்காத்தான் ரக்யாட் சொந்த நலனில்தான் அக்கறை காட்டுகிறது மக்களின் நலனில் அல்ல என்று சாடி இருந்தார்.

“அப்படி என்றால் இதை என்ன வென்பது? தேர்தலில் தோற்றவர்களுக்கு, அவர்களின் வேலை என்னவென்றுகூட வரையறுக்கப்படவில்லை ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது”, என சிம் கூறினார்.