சட்டமன்றத் தலைவர் மஇகா தேர்தலில் மும்முரமாக இருக்கிறார் என்று சொன்ன டிஏபி பிரதிநிதி இடைநீக்கம்

ngaஎதிரணி  பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலிருந்தும்  நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்படும் படலம் தொடர்கிறது.

ஆகக் கடைசியாக பேராக் சட்டமன்றத்திலிருந்து டிஏபி-இன் கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் இங்கா கொர் மிங் வெளியேற்றப்பட்டார்.

சட்டமன்றத் தலைவர் எஸ்,கே. தேவமணியின் கவனம் மன்ற நடவடிக்கைகளில் இல்லை, மஇகா தேர்தல்மீதுதான் இருக்கிறது என்று சொல்லப்போக, இங்கா சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர்  ஒருநாள்  இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக  எதிரணி தலைவர் நிஜார் ஜமாலுடின் டிவிட்டரில் தெரிவித்தார்.