அரசாங்கம் உயர்ந்துவரும் மின் உற்பத்திச் செலவை மக்கள் தலையில் கட்ட முனைந்தால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை எரிபொருள், பசுமை தொழிநுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி, அடுத்த ஆண்டு மின்கட்டணம் 10-20 விழுக்காடு உயரலாம் எனக் கூறி இருந்தார். இதன்வழி அரசாங்கத்துக்கு, ஆண்டுதோறும் மின் உற்பத்திக்கு உதவித் தொகையாக கொடுக்கும் ரிம130 மில்லியன் மிச்சப்படும், இயற்கை எரிவாயுவை குறைந்த விலையில் கொடுத்துவரும். பெட்ரோனாஸுக்கு ரிம8-10 பில்லியன் மிச்சமாகும் என்று அமைச்சர் கூறினார்.
“2014-இல் இதையும் இன்னும் பல விலை உயர்வுகளையும் எதிர்பார்க்கலாம்”, என்று கூறிய பக்காத்தான் எம்பி ரபிஸி ரம்லி, “2015-இல் ஜிஎஸ்டி-யை கொண்டு வந்ததும் மக்கள் ஆத்திரமாக இருப்பார்கள், அதன்பின்னர் எதன் விலையையும் உயர்த்துவது சிரமமாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்”, என்றார்.
“எங்குமே உதவித் தொகை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதல்லதான். ஆனால், முக்கிய பிரச்னை உதவித் தொகை அல்ல, அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற செலவினங்கள்தான்.
“நம் பிரச்னைகளுக்கு உதவித் தொகை அடிப்படை காரணமல்ல”, என்றாரவர்.
“அவர்களே உருவாக்கிய நிதிப் பிரச்னைகளிலிருந்து வெளிவர வழி தெரியவில்லை, உதவித் தொகையைக் காரணம் காட்டுகிறார்கள்”.
ரபிசி அவர்களே கடந்த தேர்தலில் பக்காதான் வென்றிருந்தால் நீங்கள்தான் நிதியமைச்சாராவீர்கள் என்றிருந்தேன்.ஆனால் அம்னோ கயவர்கள் ஏமாற்றி விட்டனர்.உங்களின் பொருளாதார வியூகம் பாராட்டுக்குரியது.