தேசிய அளவில் இந்திய சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும் மெட்ரிகுலேசன் படிப்பிற்கான இருக்கைகள் குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றால் அளிக்கும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றாது என்ற தோற்றத்திற்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படும்.
தகுதி பெற்ற மாணவர்களுக்கு இடம் ஒதுக்கி அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அளிக்கப்பட்ட வாய்ப்பை அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொண்டு மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு பதிந்து கொள்ளவில்லை என்ற சாக்குபோக்கிற்கு பின்னால் அரசாங்கம் ஒளிந்துகொள்ள முடியாது என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார்.
“வாக்குறுதி அளிக்கப்பட்ட 1,500 மெட்ரிக்குலேசன் இருக்கைகள் அனைத்தும் நிரப்பப்படும் வரையில் இரண்டு அல்லது மூன்றாவது முறையாக வாய்ப்பை அளிக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் நம்மை வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் என்று கருதுவார்கள்”, என்று அவர் இன்று மலாக்காவில் மஇகா ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் நஜிப்பிடம் கூறினார்.
சரியாகச் சொன்னீர்கள் தலைவரே! நீங்கள் சொல்லுவதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம். நஜிப் வாக்குறுதியைக் காப்பாற்றாதவர் என்று தான் நாங்களும் சொல்லுகிறோம். அதனால் தான் உங்களையும் நாங்கள் கேலி செய்ய வேண்டி உள்ளது!
ஹிண்ட்ராப் வேதமூர்த்தியை பார்த்து காப்பி அடிப்பது போல இருக்கிறது…
“மக்கள் நம்மை வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் என்று கருதுவார்கள்”. சாமியே சரணம் ஐயப்பா. இப்பதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விளித்தீர்களா?. இதைத்தான் நாங்கள் 13-வது தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லிக் கொண்டிருகின்றோமே. உங்கள் காதில் விழவில்லையா? இல்ல, மேலும் ஒரு “தொட்டில் குழந்தை” நாடகமா? இந்தியக் குழந்தைகள் “வயிற்று வலியை” மறந்து தூங்க மேலும் ஒரு “மயக்க மருந்தா”? போதுமடா சாமி உங்கள் மயக்க மருந்து வைத்தியம்.
ஏழாம் நூற்றாண்டில் ஹிந்து சாம்ராஜியாமாக இருந்தது கடாரம்[KEDAH ]புஜாங்க் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது பண்டைய காலத்து விக்ரகங்கள். இந்த அம்னோ அரசு பெரும்பாலானவற்றை அழித்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த சிலவற்றை இன்று[1-12-2013] அழித்துள்ளார்கள். ராஜபக்சே வை, சென்று, கண்டு வந்து பிறகு, நஜிப்பின் முதல் வேலை இது. இனிமேல் என்னென்ன நடக்கப் போகிறதோ?
பழனிவேலு ஆடதடா நாடகம் நீயே கய்யலகாத மக்கு தலைவன் உன் பொண்டாட்டி குட உன்னை நம்பட்டலாமே ?
அவர் வேலைய செய்ய உடுங்கப்பா…..
enna velayai சுருட்டல் வேலைவா?
என்று இவன்கள் அவன்களின் வாக்குறுதியை காப்பாற்றினான்கள்? நாமெல்லாம் மடையர்களா? இன்றும் இவன்களை நம்பி நாம் கேடு கேட்டு போகவேண்டுமா?
காகாதிர் என்று ஆட்சியில் உட்கார்ந்தானோ அப்போதே நம்மை அழிக்க முழு மூச்சுடன் MIC -தலைமை சாமி யின் ஆதரவுடன் செய்ய ஆரம்பித்து விட்டான். நாம்தான் இன்னும் மடையர்களாக இவன்களை எதிர்பார்த்து ஏங்கி கொண்டிருக்கின்றோம் –என்றுதான் நாமெல்லாம் திருந்துவோமோ -என்றுதான் நாமெல்லாம் ஒன்று படுவோமோ!!!
இதெல்லாம் இந்த மேடை பேச்சோடு போச்சு. திருவேங்கடம் என்பவர் குளறுபடி நடந்ததை வார்த்தைக்கு வார்த்தை முகனூலில் சொல்லியிருந்தார். கல்வி அமைச்சரையும் கமலநாதனையும் விவாதத்துக்கு அழைத்திருந்தார். அப்பொழுது இந்த பழனி வேலு வாயில் கொழுக்கட்டை வைத்து இருந்தான். அப்பொழுது களத்தில் இறங்கி வேலை செய்து இருக்கணும் அல்லது இருந்தவன் செஞ்சு இருக்கணும். மக்கள் மெச்சிக்க சொல்றான். அடுத்த வருடமும் SPM முடிவு வரும் பிரச்சனை தலை எடுக்கும் ஆனால் இவன் எங்க இருப்பனே தெரியாது. இப்பொழுது இப்பிரச்சனையை கேட்டால் , நான் பிரதமிரிடம் சொல்லிவிட்டோம் என்று ஒன்றுக்கும் உதவாத பதில் வரும். மானெங்க்கெட்ட தலைவனுங்க.
கமலநாதனின் தங்கை அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்று இந்தியாவுக்கு சென்று மருத்துவம் படிக்கச் சென்று தேர்ச்சி பெறாமல் மறுபடியும் உபகாரச் சம்பளம் பெற்று இந்தோனிசியாவுக்கு சென்று மருத்துவரானார். இதில் என்ன குறை என்று கேட்கலாம். இவர் SPM கலைப் பிரிவில் சராசரி தேர்ச்சி பெற்றவர். அந்த வருடம் உணமையிலேயே தேர்ச்சி பெற்ற ஒரு மாணவரின் உரிமை பறிக்கப் பட்டு விட்டது. சாமி மாமா கொடுத்த நாயமான உதவி. இவனெல்லாம் எப்படி நாயமாக மக்களுக்கு நன்மை செய்வான்.
டே மடையா பொய் சொல்லு அதுவும் ஒரு அளவுதான் ??????? இபொழுது தான் கண்ணு தெரியூதா மாங்க மடயனே
தலைவரே ஒரு மாநாடு ……ஒரு கோரிக்கை …நாடாளுமன்றதில் பிரதமர் , துனைபிரடமர் கல்விமான் மயுடின் அவர்களிடம் கேக்க வேண்டிய கேள்விகளை பொதுவாக கேட்டால் அதுனுடைஹா பதில் எப்போ கிடைக்கும்???? சரி சரி தலைவரே பிரதமர் நமது தமிழர்கள் எதிர்பையும் மீறி Sri லங்கவுக்கு சென்றதுக்கு மாநாட்டு அரங்கடிலே பிரதமருக்கு ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை..Ohhhh நிங்கள் தான் வெள்ளிகிழமை பேசுவேன்னு சொல்லிடிங்களே…
…..எண்ட வெள்ளிகிழமை பையா……?????
உண்மைதான் சிங்கம் அவர்களே ! இந்த இனவாதி அந்த ரத்தப்பெய், இனவாதி பார்த்து சூடு போட்டு கொண்டது. நம் இனத்தை அழிப்பற்கு உருதி கொண்டுலார்கள் ! ஆனால் இங்குள்ள பதர்களுக்கு (மஇகா) தெரியவில்லை !கடாரம்[KEDAH ]புஜாங்க் பள்ளத்தாக்கு அழித்தார்கள்
! இங்குநமக்கு நல்ல தலைவன் இல்லை !அதான் இந்த நிலைமை!!!அன்கோர்வாட்’ கம்போடியாவில்
இருக்கிறது .அதுவும் நம் முன்னோர்கள் வழி வந்தவைதான் போய் அழிக்க சொல்லுங்கள் பார்ப்போம்!!!! இவர்கள் எல்லாம் சதாம் உசேன் ,கடாபி. பின் லேடன் அரவாட் .போன்று அழிந்தபோல்’ ஒரு நாள் அழிந்து போவார்கள்.காலம் அவர்களுக்கு தரும் பரிசு.!!!!!!!!!!
இந்த வேகம் எப்போதும் இருக்கவேண்டும், சமுதாய பிரச்சனைகள் வரும்போதெல்லாம், அம்னோவின் நெருக்குதலுக்கு அடிபணியாமல் துணிந்து குரல் கொடுக்கவேண்டும். உங்கள் தலைமையில் ஒரு மாற்றத்தை கொண்டுவாருங்கள், அப்புறம் பாருங்கள் ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே உங்கள் பின்னால் வரும், இந்தியர்கள் பிரதிநிதி மஇகாதான் என்று மார்தட்டி சொல்லலாம். தயவு செய்து நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், நிறைவேற்ற முடியாதவற்றை சொல்லாதீர்கள்.
நீயா இப்படி சொன்ன?
மாரி மாரி ஆடிதுக்கொல்லுங்கள் …பிட்டத்தை காட்டுங்கள்…MIC உம்னோ தலைவர்களிடம் மிகவும் சரியாக நமக்கு செய்வார்கள் …அதைத்தான் 50 ஆண்டாக ஆட்சி பிடத்தில் உள்ள தலைவர்கள் செறப்பாக…செய்தார்கள் ……….புதை குழிகள் இனியும் கிடையாது ……அதையும் விற்றாய் விட்டது ………புராதன நிலங்கள் …தோண்டப்பட்டு …..அழிக்க…. ……
ஜஸ்பால் சிங்குக்கு எப்படி இவ்வளவு ஒட்டு கிடைக்குது? எத்தனை சிங்கு ம.இ.காவில் இருக்கான். நோகாம பதவிகளை தட்டிகிட்டு போயிடுவான். தமிழன் இழிச்சவாயன் என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆமாம்.எல்லாம் கூமுட்டைகள். திருந்தவே மாட்டாங்கள்!
இந்த மானம் இழந்த கட்சி மடையனுங்களிக்கு மலாய்கரன்களிடம் பிச்சை கேட்டே பழகிப் போச்சி.. கேப்பானுங்க.. ஒவ்வொரு வருசமும் இதே வசனத்தை நினைவில் வைத்திருந்து திரும்பத் திரும்ப கேப்பனுங்க.. கையாலாகாதவனுங்க… இந்த லட்சனதுல தினக் குரல் பத்திரிக்கையை வேற பழனி வாங்கி குட்டிச் சுவராக்குறான்..
அப்பவே சொன்னேன் இந்த MIC நதேறி கூட்டதை பார்த்த இடதில் உதைக்க வேண்டும் என்று கேட்டீர்களா ? அந்த சாமீ வேலுவை செருப்பால் அடித்த கிழவியை கூப்பிட்டுத்துதான் இவங்களை பி செருப்பால் அடித்தால் தகும்
தேவை இருக்கும்போது வாக்குகளை வாரி இரைஇபதுடன் அனைது அரசியல் தலைவர்களின் தலையயா கடமை, வெற்றி பெற்றவுடன் அனைத்தையும் மறந்துவிடுவதும் அவர்களின் தலையாய கடமையும் கூட. படைத்த ஆண்டவன வந்தாலும் இவர்களின் குணம் மாறப்போவதில்லை.